×
 

நாக்கை அடக்கி பேசுங்க பழனிச்சாமி.. இல்ல மக்கள் அடக்கிடுவாங்க! திமுக கண்டனம்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை என திமுக தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தோல்வி மேல் தோல்வி கண்டு அரண்டு போயுள்ள பழனிசாமி, சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்றாலும் பொதுமக்கள் மட்டுமல்ல அவரது கட்சிக்காரர்களே புறக்கணித்து செல்வதாக விமர்சித்து உள்ளது.

இதையும் படிங்க: என்ன பேச்சு இதெல்லாம்? ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய இபிஎஸ்.. கொதித்துப் போன மா.சு..!

இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவதூறுகளையும் வசைகளையும் மட்டுமே பரப்பிவந்த பழனிசாமி, ஏழை எளிய மக்கள், கர்ப்பிணி பெண்களின் நலனை, வாழ்வை காக்கும் ஆம்புலன்ஸ் மீதும், அதன் ஓட்டுநர்கள் மீதும் பழனிசாமிக்கு அப்படியென்ன காழ்ப்புணர்ச்சி என்றும் வயித்தெறிச்சல் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.

நாளுக்கு நாள் யாருக்கும் மரியாதை தராமல் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்றும் இல்லையெனில் மக்களே தகுந்த பதிலை தருவார்கள் எனவும் சாடியது.

இதையும் படிங்க: “அவரு வர்ல, உங்களுக்கு எதுவுமே இல்ல” ... டிடிவி-க்கு ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட பாஜக தலைமை... இபிஎஸுக்கு எதிராக அசைன்மெண்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share