×
 

தொகுதி பங்கீடு தீவிரம்..!! கொமதேகவிற்கு 2 தொகுதிகள்... உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக தலைமையிலான கூட்டணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், கொங்கு மண்டலத்தில் வலுவான செல்வாக்கு கொண்டுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு மண்டலத்தின் குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட சமுதாய மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் கட்சியாகும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் பலத்த போட்டியை சந்தித்தனர்.

இம்முறை கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி போன்றவை இணைந்துள்ளதால், தொகுதி ஒதுக்கீட்டில் சற்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், திமுக தலைமை பல கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து வருகிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகள் போன்றவை உறுதியாகியுள்ளன.

இதையும் படிங்க: மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!

இதனிடையே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் தொகுதி பங்கீடு முடிவான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

இதையும் படிங்க: நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share