அவங்க கிள்ளுக்கீரையா?.. இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி... திமுகவை தோலுரித்த EPS...!
இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி வழங்குவது போல் திமுக நாடகமாடுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் நோக்கில், “உலகம் உங்கள் கையில்” என்ற மாபெரும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இத்திட்டத்தின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு அரசின் கல்வி மேம்பாட்டு முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அதை கல்லூரி மாணவர்களுக்கு விரிவுபடுத்தும் வகையில் 2025-2026 பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு அதிநவீன மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் அரசு பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், விவசாயக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்), தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI) ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பயனடைவார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுடன், தனியார் கல்லூரிகளில் பயிலும் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்ட பயனாளிகள் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.
இதையும் படிங்க: திரும்ப திரும்ப நடந்தா கொலை... சிறுவன் இறப்புக்கு திமுக அலட்சியமே காரணம்... EPS குற்றச்சாட்டு...!
இந்த நிலையில், நான்கரை ஆண்டுகளாக மடிக்கணினி கொடுக்காமல் இளைஞர்களை திமுக அரசு வஞ்சித்து வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் வருகிறது என்றதும் இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி கொடுப்பது போல் நாடகத்தை அரங்கேற்றுவதாக குற்றம் சாட்டினார். திமுகவின் நாடகங்களை தமிழக மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் உங்கள் ஆட்சியை மீண்டும் கொண்டுவர மாட்டார்கள் என்றும் உறுதிப்படுத்த அறிவித்தார். நாள்தோறும் நீங்கள் நடத்தும் நாடகங்கள் எல்லாம் தேர்தல் நேரத்து வேஷம் என மாணவர்களுக்கும், மக்களுக்கும் தெரியாதா என்று கேள்வி எழுப்பினார். மடிக்கணினி கிடைக்காத தற்போதைய கல்வியாண்டு அரசு பள்ளி மாணவர்கள் என்ன கிள்ளு கீரையா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கழிவறை முதல் காவாங்கரை வரை கலைஞர் பெயர்... MGRஐ மறைக்க முயற்சிக்கும் திமுக... அதிமுக கண்டனம்...!