×
 

“வாங்க... வாங்க... வாழைப்பழம் இந்தாங்க...” - பாஜக பாணியை கையில் எடுத்த திமுக... திக்குமுக்காடிய மக்கள்...!

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி முட்டை என்றும், தமிழ்நாட்டிற்கு அல்வா கொடுத்து விட்டதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு சரியான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் இல்லை எனக்கூறி திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் போஸ்டர்கள், நூதன போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதற்கு முன்னதாக கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டும் விதமாக, கோவையில் திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வடைகளை இலவசமாக வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் திமுக கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனக்கூறி கோவை சிவானந்தா காலனியில் பொதுமக்களுக்கு வாழைப்பழம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தற்போது மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி முட்டை என்றும், தமிழ்நாட்டிற்கு அல்வா கொடுத்து விட்டதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி முட்டை என மத்திய பட்ஜெட்டை சாடும் வகையிலான போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. அதேபோல் கோவை ராஜவீதியில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு திமுகவினர் 500 முட்டைகள் வழங்கி, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி “முட்டை” என விமர்சித்து பரப்புரையில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: கொடுமை..! மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறை... திமுகவை கண்டித்த சீமான்..!

அதன் தொடர்ச்சியாக, இன்று திருப்பூரில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு திமுகவினர் வாழைப்பழம் வழங்கினர். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பட்ஜெட்டில் வாழைப்பழம் கொடுக்கப்பட்டதாகவும், அவர்களுடைய வறுமையை பறைசாற்றும் வகையில் மக்களுக்கு வாழைப்பழம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். திமுக நிர்வாகிகள் மேடையில் இருந்த படியே வாழைப்பழங்களை வழங்க, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அதனை வாங்கிச் சென்றனர். 

இதையும் படிங்க: தாறுமாறாக லத்தியால் தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share