×
 

தமிழக அரசின் புதிய செம்மொழி இலக்கிய விருது..! சாகித்ய அகாடமி பிரச்சனைக்கு மாற்றாக அறிவிப்பு..!

தமிழக அரசின் செம்மொழி இலக்கிய விருது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழி இலக்கிய விருது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் பேசும்போது மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் தலையீடு காரணமாக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது குறித்து வேதனை தெரிவித்தார்.

இலக்கியம், கலை போன்ற துறைகளில் கூட அரசியல் தலையீடு ஏற்படுவது ஆபத்தானது என்று எச்சரித்தார். பல எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள் இதற்கு எதிராக குரல் எழுப்பி, தமிழக அரசிடம் தலையீடு கோரியதாகவும் குறிப்பிட்டார்.அதனால், இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த இலக்கியப் படைப்புகளை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது என்ற பெயரில் தேசிய அளவிலான விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி ஆகிய ஏழு மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படும்.ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருது பெற்ற ஆசிரியர்கள் அடங்கிய சுயேச்சை குழு அமைக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். இதன்மூலம் தரம், வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தாமரை மலரும்.. தமிழகம் மாறும்! போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய தமிழிசை!

ஒவ்வொரு விருதுக்கும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அரசு இதற்கு புரவலராக இருந்து, இந்திய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் சொன்னார்.இலக்கியத்துக்கு எல்லைகள் இல்லை, அது மக்களை இணைக்கும் பாலம் என்று குறிப்பிட்ட முதல்வர், மொழிபெயர்ப்பு நூல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அந்த விழாவிலேயே 84 மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டதோடு, தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தின் கையேட்டையும் அறிமுகப்படுத்தினார். 

இதையும் படிங்க: EPS சார்... இது உங்களுக்கு செட் ஆகல..! வெயிட் பண்ணி XEROX எடுத்துக்கோங்க... அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த டிஆர்பி ராஜா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share