"வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டார். அதிமுகவுடன் திமுகவுக்குக் கூட்டணி அமைவதற்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார். தற்போதைய அரசியல் சூழலில் தவெக அமைச்சர்கள் சிலர் திமுக-அதிமுக கூட்டணி குறித்துப் பேசி வருவதாகக் குறிப்பிட்ட செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர்களின் கனவாக அது இருக்கலாம் என்றும், ஆனால் அதற்கு நிச்சயமாக எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த அறிக்கை தமிழக அரசியலில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போடு இருப்பதாகப் பேசியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கனிமொழி, இதுவரை ஒன்றிய அரசை எதிர்த்து தவெக அரசில் உள்ளவர்களோ அல்லது முதலமைச்சரோ எந்த ஒரு கேள்வியும் எழுப்பியதாகத் தனக்கு நினைவில் இல்லை என்றார்.
கனிமவள மசோதாவாக இருக்கட்டும், நிதித் தொகையாக இருக்கட்டும், மாநில உரிமைகளைப் பாதிக்கக்கூடிய ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அது குறித்து தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். எதிர்ப்போம் என்று வாய் வார்த்தையாகக் கூறி வருகிறார்கள் தவிர, தமிழ்நாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து எதிர்த்துப் பேசவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.மூன்று நாட்களுக்கு முன்பு கனிமவளம் தொடர்பான மசோதா விவாதமே இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "டப்பிங் முதல்வர் விஜய்... அரைக்கால் காக்கி டவுசர் நிர்மல் குமார்"..! அப்பாவு கடும் விமர்சனம்.!!
அது தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிதியைப் பாதிக்கக்கூடியதும், மாநில உரிமைகளைப் பாதிக்கக்கூடியதும் ஆகும். அதனைப் பற்றியே தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார். பாஜகவை எதிர்ப்போம் என்று வாய் வார்த்தையாகச் சொல்கிறார்களே தவிர, தமிழ்நாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைக் கூட எதிர்த்து எதுவும் பேசுவதில்லை என்பதே உண்மை என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கருத்து தற்போதைய ஆளும் கட்சியின் மத்திய அரசுடன் உள்ள உறவு குறித்த விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!