ரூ.634 கோடி லஞ்சப் புகார்..! கே. என். நேரு மனு தள்ளுபடி..! புதிய நெருக்கடி..!!
லஞ்ச புகார் தொடர்பான உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்வதற்கான தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்துள்ளது. இதனால், நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்காக ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள புகாரில் வழக்குப் பதிவு செய்ய தற்போது எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகத்துறையின் பொறுப்பில் இருந்தபோது 2538 பணியிடங்களை நிரப்புவதற்காக ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத் தனி நீதிபதி, கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அதைத் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் நிலையில் உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர முடியும்.
இதையும் படிங்க: அவரு மட்டும் எப்படி ஜெயிச்சாராம்? தவெக விஜய் உடன் தன்னை ஒப்பிடும் உதயநிதி?! ஸ்டாலினிடம் பறக்குது புகார்!!
நகராட்சி நிர்வாகத்துறையில் பணியமர்த்தல்களுக்காக பெரும் தொகை லஞ்சமாகப் பெறப்பட்டதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் மீதான இந்த வழக்குப் பதிவு அனுமதி, உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவால் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் Wild Wild Tamil Nadu: முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்த மு.க. ஸ்டாலின்!