"ரம்மி விளையாட்டில் 13 ஜோக்கர்கள்"..! அலங்கோலமான சட்டமன்றம்..!! ஐ. லியோனி விமர்சனம்.!!
சட்டமன்ற நிகழ்வுகளை திமுக பேச்சாளர் லியோனி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் பல தரப்பினராலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசு பதவியேற்றது முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் பலரும் கவனம் செலுத்தும் விதத்தில் அமைந்திருந்தாலும், அங்கு நடக்கும் விவாதங்கள், பதிலளிக்கும் முறைகள், நடைமுறைகள் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள், அரசியல் பார்வையாளர்கள் என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சட்டமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் கூடி மாநிலத்தின் முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்கும் உயரிய மன்றம் என்ற எதிர்பார்ப்புடன் பார்க்கும்போது, இப்போது நடைபெறும் காட்சிகள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாததாகவே பலரும் கருதுகின்றனர். புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் முழு அளவிலான நிதிநிலை அறிக்கை விவாதங்களிலேயே விமர்சனங்கள் தொடங்கின.
நிதிநிலை அறிக்கை என்பது அரசின் வருவாய், செலவு, திட்ட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை விரிவாக விவாதிக்கும் வாய்ப்பு. ஆனால் அந்த விவாதங்களில் அமைச்சர்கள் தங்கள் துறைக்கு அப்பாற்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், மாறி மாறி பதில் சொல்வதும் சபாநாயகரால் அனுமதிக்கப்படுவதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!
இந்த நிலையில் சட்டமன்ற நிகழ்வுகளை ஐ. லியோனி விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தில், வேளாண்துறை தொடர்பான கேள்விகளுக்கு தொழில்துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர், முதலமைச்சரின் காவல்துறை தொடர்பான கேள்விகளுக்கு கல்வித்துறை அமைச்சரும், பல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு, பெய்யான செய்திகளை பொதுப்பணித்துறை அமைச்சரும், மாறி மாறி பதிலளிக்க, சபாநாயகர் அனுமதி அளித்து வருவது மாபெரும் கேலிக்கூத்து என்று கூறினார்.
ரம்மி விளையாட்டில் 13ம் ஜோக்கர்களாக இருப்பது போலவும், இசை நிகழ்ச்சியில் அனைத்து இசைக்கருவிகளும் ஜால்ராக்களாக மாறியது போலவும், அலங்கோலமான சட்டமன்றமாக காட்சியளிக்கிறது என்றார். இன்னும் இந்த அக்கிரமம் எத்தனை நாட்களுக்கோ? என்றும் விரைவில் இதற்கு முடிவு வரும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தட்டுங்கள் திறக்கப்படும்"..! FCRA எதிர்ப்பு... முதல்வர் விஜய்க்கு பேரவையில் வன்னியரசு பாராட்டு.!