பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை திறந்து வைக்கும் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என கூறியதை தொடர்ந்து திமுகவினர் ஸ்டாலின் வாழ்க என கோசமிட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை திறந்து வைக்கும் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என கூறியதை தொடர்ந்து திமுகவினர் ஸ்டாலின் வாழ்க என கோசமிட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் மற்றும் சாலை சுரங்கப்பாதை ரயில்வே திட்ட பணிகள் என 4800 கோடி ரூபாய் முடிவடைந்த திட்ட பணிகளை துவங்கி வைப்பதற்கும் புதிய திட்டத்தை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு தூத்துக்குடியில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் 10000 பேரும் திமுகவினருக்கு 2000 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டது. அப்போது திமுகவினருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு திமுகவினர் கருப்பு சிவப்பு துண்டு அணிந்து வருவதை பார்த்ததும் பாஜகவினர் மோடி வாழ்க, பாரத் மாதா கி ஜே என கோசமிட்டனர்.
இதையும் படிங்க: “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!
பதிலுக்கு திமுகவினரும் சனாதனம் ஒழியட்டும், ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என கோசமிட்டதால் பாஜகவினரும் திமுகவினரும் மாறி மாறி கோஷமிட ஆரம்பித்தனர் இதனால் விழா மேடை அருகே பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் இரண்டு தரப்பினரையும் அமைதியாக இருக்கச் சொல்லி கூறி அமைதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?