×
 

“பார்த்தீங்களா உங்க தலைவர் லட்சணத்த... இனியாவது உஷாரா இருங்க”.. அதிமுகவினரை அலர்ட் செய்த திமுக அமைச்சர்..!

தன்னை நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை. மூன்றாம் தரமான அரசியல்வாதி தான் எடப்பாடி பழனிச்சாமி

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆகியோர் இணைந்து பெரியாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி பேசுகையில்: தன்னை நம்பி வந்தவர்கள் எல்லாம் பாதி வழியில் கழட்டி விடுபவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதற்கு நேற்று டெல்லியில் அவர் நடந்து கொண்ட விதம் அவரை நம்பி வந்தவர்களை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றது உதாரணமாக அமைந்துள்ளது. 

அவர் யாருக்கும் விசுவாசி இல்லை என்பது தமிழ்நாடு நன்றாக அறிந்துள்ளது. இன்று பாஜக தான் நான்காண்டு கால ஆட்சியை காப்பாற்றியது என்று கூறுகிறார். அப்படி 4 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியை காப்பாற்றிய பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் கலட்டி விட்டு வேடிக்கை பார்த்தவர். 

இதையும் படிங்க: நீங்க தான் மூடிக்கணும் ஸ்டாலின்! அந்த அவசியம் எங்க அண்ணனுக்கு இல்ல... கொந்தளிக்கும் அதிமுக

தனக்கு முதலமைச்சர் பதவி தந்த சசிகலாவே கட்சியை விட்டு நீக்கி வேடிக்கை பார்த்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தன்னை நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் அவருக்கு கைவந்த கலை. மூன்றாம் தரமான அரசியல்வாதி தான் எடப்பாடி பழனிச்சாமி என்பதற்கு இந்த சம்பவங்கள் எல்லாம் உதாரணமாக அமைந்துள்ளது. 

இனி அதிமுக தொண்டர்கள் ஏமாறாமல் விழித்துக் கொண்டால் சரி. யாரையும் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கழட்டி விடுவார். எடப்பாடி பழனிச்சாமி கூறுவது எனக்கு ஆட்சி முக்கியமல்ல பதவி தான் முக்கியம். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருப்பது தான் முக்கியம் என்று சொல்லக்கூடியவர். அவரால் அதிமுக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர முடியாது.

இன்று முகத்தை மறைத்துக் கொண்டு பலர் திரிகின்றனர். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசியல்வாதிகளில் தனது முகத்தை கூட காட்ட முடியாமல் தனது முகத்தை கர்ச்சிப்பால் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் போது உள்ளே என்ன நடந்தது என்று சொல்ல முடியாது. முகத்தை மூடிக்கொண்டு வந்தாலே வெட்கப்பட்டும் அசிங்கப்பட்டும் வருவதாக அர்த்தம் அல்லது ஒரு தவறை செய்வதற்கு வருவதாக அர்த்தம். 

அதிமுகவை பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அடக்கு வைத்து விட்டார். இதனை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

தற்போது பாஜகவுக்கு நன்றி உடன் இருப்பதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி அந்த விசுவாசத்தை நாடாளுமன்ற தேர்தலில் காட்டி இருக்க வேண்டும் அல்லவா? நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை கலட்டி விட்டு விட்டு பலத்தை காட்டுகிறோம் என்று தனியாக நின்றார் விஸ்வாசம் இருந்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பாஜகவுடன் வைத்திருப்பார். 

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்று தெரிந்தவுடன் தன்மானத்தை பற்றி பேசுகிறார். திமுக தலைவர் முதலமைச்சரான முக.ஸ்டாலின் தன்னை நம்பி வந்த யாரையும் கலட்டி விட மாட்டார். அவர்களை நட்போடு அரவணைத்துக் கொள்பவர் தான் முதலமைச்சர். 

இதையும் படிங்க: நீங்க எப்படிப்பட்டவர் தெரியுமா? அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு... பிரதமரை வாழ்த்து மழையில் நனைய வைத்த EPS

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share