×
 

தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

மீண்டும் தேர்தல் வந்தால் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தேர்தல் எப்பொழுது வந்தாலும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒரே மாதத்தில் கேலிக்கூத்தான அசிங்கமான ஆட்சியாக தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மாறி இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார். பாஜகவின் ஜெராக்ஸ் போல் முதலமைச்சரின் விஜய் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள் மற்றும் கோரிக்கைகளையே முதல்வர் விஜய் கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தப்பிக்கவே மோடியை சந்தித்தேன் என தன்னை விமர்சனம் செய்திருந்ததாக முதல்வர் மீது ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கரூர் வழக்கிலிருந்து தப்பிக்க தான் டெல்லி சென்றீர்களா என முதல்வர் விஜய் இடம் தான் கேட்கட்டுமா என்று தெரிவித்துள்ளார். உங்களைப் போல் கேள்வி கேட்டு தரம் தாழ்ந்த அரசியலை தான் செய்ய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் திராவிட மாடலின் ப்ளூ பிரிண்ட் இல் தான் செயல்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிர் அணியின் பணியும் காரணம் என்றும் பேசியுள்ளார். 2030க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் எனத்தான் கூறியதை தற்போது 2036 க்குள் என்று முதல்வர் விஜய் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் ரூட்டு தான் கரெக்ட்! இபிஎஸ் புதிய முடிவு! திமுகவின் பாணியை கையில் எடுத்த எடப்பாடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share