×
 

#BREAKING: மீண்டும் கொளத்தூர் தொகுதி..! முதலமைச்சர் ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்பு..!!

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், மார்ச் 30 முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கினர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. 

வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நாளிலேயே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முதல்வர் ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இபிஎஸ் ஒரு துரோகி..! சசிகலாவையே ஒதுக்கியவர்..!! கனிமொழி கடும் குற்றச்சாட்டு..!!

கொளத்தூர் தொகுதி, திமுகவின் வலுவான கோட்டையாக அறியப்படுகிறது. மு.க.ஸ்டாலின் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இந்தத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நான்காவது முறையாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடுகிறாlர். 

இதையும் படிங்க: கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share