திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தீவிரம்... கருத்து கேட்கும் செயலியை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு கருத்து கேட்கும் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முனைப்பு காட்டி வருகிறது திமுக. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளில் திமுக முந்தி வருகிறது. அறிக்கை தயாரிப்பு குழுவை சமீபத்தில் திமுக அறிவித்தது. நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையில் இந்த குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட திமுக தலைமைக் கழகத்தால் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திமுக மறதிக்கு கடலோர மக்கள் பதிலடி காத்திருக்கு... நயினார் விமர்சனம்...!
இந்த நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தனது முதற்கட்ட பணியை தொடங்கியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கருத்து கேட்கும் பொருட்டு புதிய செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் தேர்தல் தொடர்பான தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு... குற்றச்சாட்டு இருந்தா சொல்லுங்க..! அமைச்சர் மா. சு. பேச்சு..!