இன்னைக்கு சம்பவம் உறுதி... சட்டப்பேரவைக்குள் மாஸ்டர் பிளானுடன் என்ட்ரி கொடுத்த திமுக... ஷாக்கில் தவெக...!
திமுக எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டபோது, காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய மூன்று முக்கிய பிரச்சினைகளையும் இன்று சட்டப்பேரவையில் எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக அரசு தனது முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இந்த நாளில், பிரதான எதிர்க்கட்சியான திமுக பல்வேறு திட்டங்களுடன் பேரவைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் ஊடகங்களிடம், காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய மூன்று முக்கிய பிரச்சினைகளையும் இன்று சட்டப்பேரவையில் எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை என்றும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டாக உள்ளது. இதை இன்று பேரவையில் வலியுறுத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அதேபோல், மேகதாது அணை விவகாரத்திலும் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு அரசும் மேகதாது அணையை கட்ட அனுமதிக்க மாட்டோம் என கூறி வந்தாலும், அந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டாகும். எனவே, இந்த விவகாரத்தையும் பேரவையில் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் வாக்குறுதியில், ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு பகுதி அளவிலான கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருந்தது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை என்று திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதனால், இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயம் தொடர்பான புதிய அறிவிப்புகள் இடம்பெற உள்ள நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தையும் மையமாக வைத்து கேள்வி எழுப்பவும், விவாதத்தை ஏற்படுத்தவும், பேரவையில் கடும் எதிர்ப்பை பதிவு செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளது.
அதனால்தான் திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதால் காரசாரமான விவாதங்களும், அமளியும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?