தெரு முழுக்க மெண்டல்கள் தான் போல... ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக MLA!
ஆர் கே நகர் பகுதியில் ஆய்வுக்குச் சென்ற திமுக எம்எல்ஏ எபினேசர் தெருமுழுக்க மென்டல்கள்தான் போல என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்குவதன் மூலம் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சுயமாக முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் அறியப்படுகிறது.
இது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அழைக்கப்படுகிறது. இதன் மூலம், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யவும், அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசு முயற்சிக்கிறது.திட்டத்தின் நோக்கம்மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் முதன்மை நோக்கம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்குவதாகும். இந்த நிதி உதவியானது, அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கவும், குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவுகிறது.
இந்த நிலையில், சென்னை ஆர் கே நகரில் திமுக எம்எல்ஏ எபினேசர் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வரவில்லை என ஒரு பெண் கேட்டதாக தெரிகிறது. அப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சொந்த வீடு உள்ள போது ஆயிரம் ரூபாய் மற்றும் மகளிர் விடியல் பயணம் எதற்கு என திமுகவினர் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. வீடியோ எடுத்த வரையும் செல்போனை பறித்து பதிவுகளை அடைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேள்வியே கேட்கக்கூடாதுல? ஆள் சேர்க்கை ஒன்னு தான் கேடு! திமுக எம்.எல்.ஏவுக்கு நயினார் கடும் கண்டனம்..!
மகளிர் உரிமைத் தொகை எங்கே என கேட்டதால் பிரச்சனை ஏற்பட்ட போது, திமுக எம்எல்ஏ எபிநேசர் ஆவேசமாக பேசி உள்ளார். இந்த தெருவில் நிறைய மெண்டல்கள் இருப்பார்கள் போல இவர்கள் எல்லாம் மெண்டல்களா என்று கேள்வி எழுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதுக்கு தான் உங்களுக்கு ஓட்டு போட்டோமா? - காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் - எம்.எல்.ஏ. செய்த காரியம்...!