"பதவியே இல்லாவிட்டாலும்" ... திருவண்ணாமலையில் நின்று ஒரே போடாய் போட்ட கே.என்.நேரு...!
அமைச்சர் பொறுப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொகுதி மக்களுக்காக என்றென்றும் தொடர்ந்து அயராது பாடுபடுவேன்
அரசியலைத் தாண்டி திருவண்ணாமலை மாநகரம் மட்டுமின்றி கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மை அருணை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும்... அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்தார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் மதன் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரை விட 2455 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தொடர்ந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட கடலைக்கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு, பே கோபுர வீதி, சின்னக்கடை வீதி, பேருந்து நிலையம், பெரியார் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று திறந்தவெளி ஜூப்பில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026..! திருச்சி மேற்கில் கே.என். நேரு வெற்றி..!!
முன்னதாக ராஜ கோபுரம் அருகே நன்றி தெரிவிக்கும் நிகழ்வை தொடங்கிய முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவிற்கு தொண்டர்கள் திருஷ்டி கழித்தனர்.
தொடர்ந்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றிய கே.என்.நேரு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் சிறப்பாக பணியாற்றிய நிலையில் கடைசி நேரத்தில் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பை அறிந்த திருவண்ணாமலை மக்கள் தன்னை வெற்றிபெற செய்ததற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வெற்றியை பலரும் கணிக்க முடியாமல் உள்ளனர் என்றும் திராவிட மாடல் ஆட்சியில் தான் தமிழகம் சிறந்து விளங்கியது அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடைத்துள்ளது என்றும் பெருமிதமாக பேசினார்.
தமிழ்நாட்டில் ஒரு மர்ம அலை வீசி அனைத்தையும் அழித்துவிட்டு சென்றது ஆனால் திருவண்ணாமலையில் உதயசூரியன் உதித்தது என்றும் அய்யன் வள்ளுவன் கூறியது போல இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கு இணங்க திருவண்ணாமலை மட்டுமன்றி தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் வந்துள்ளதையும் எடுத்துரைத்த அவர் அமைச்சர் பதவி இல்லை என்றாலும் தொடர்ந்து தொகுதிக்காக அயராது பாடுபடுவேன் என தனக்கு வாக்களித்த மக்களுக்கு உறுதியளித்தார்.
அரசியலைத் தாண்டி திருவண்ணாமலை மாநகரம் மட்டுமின்றி கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மை அருணை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மக்கள் மீது அடுத்தடுத்து பாரம்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!