×
 

சூடுபிடித்த பார் கவுன்சில் எலெக்ஷன்... திமுக M.P. கிரிராஜன் வேட்பு மனு தாக்கல்..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் என்பது வழக்கறிஞர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், தொழில்முறை தரத்தை உயர்த்தவும், சட்டத் துறையில் ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட முக்கியமான நிகழ்வாகும். இந்தக் கவுன்சில், இந்திய பார் கவுன்சிலின் கீழ் இயங்கும் மாநில அளவிலான அமைப்பாக செயல்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை இணைத்து ஒரே பார் கவுன்சிலாக இயங்கி வருகிறது. இதன் தலைமையகம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தத் தேர்தல் பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும் என்றாலும், பல்வேறு சட்டரீதியான சிக்கல்கள், வழக்குகள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக தாமதமாகி வந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்த இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராஜிவ் சக்தர் தலைமையில் தேர்தல் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அறிவாலயத்தில் அவியல்... கமலாலயத்தில் சாம்பார்..!! மக்கள் பனையூர் பக்கம்... நாஞ்சில் சம்பத் உறுதி..!!

இந்த தேர்தலில் மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் 5 பெண் வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2 பெண் உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்தநிலையில் தேர்தலில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக எம்.பி.கிரிராஜன், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தார். நாளையுடன் கடைசி நாள் என்பதால் பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க: நெருங்கும் ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுவுடன் கேப்டன் நினைவிடத்தில் L.K. சுதீஷ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share