கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!
கோவில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஈறபடுத்தியுள்ளது
மதுரையில் கோவில் வாசலில் பழத்தட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விவகாரத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் மகனின் மண்டை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கடை வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தங்க தமிழ்ச்செல்வன், பின்னர் அமமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி 2019ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி திமுகவில் இணைந்தார். தற்போது தேனி நாடாளுமன்றத்தின் திமுக உறுப்பினராகவும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!
தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிஷாந்த் என்ற மகனும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். இவருடைய மகனான நிஷாந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக இருந்து வரும் நிலையில் இன்று மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தனது கர்ப்பிணி மனைவியுடன் வருகை தந்துள்ளார்.
அப்போது கோவில் வாசலில் வியாபாரம் செய்யும் மாணிக்கம் நகரைச் சேர்ந்த சமயமுத்து 56, மகன் மணிகண்ட பிரபுவிடம் 25 என்பவரிடம் தேங்காய் பழ தட்டு வாங்கிய நிலையில் விலை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தேங்காய் கடை வியாபாரி மணிகண்ட பிரபு தேங்காயை எடுத்து நிஷாந்த் தலையின் மீது எறிந்துள்ளார். இதில் காயமடைந்த நிஷாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடை வியாபாரிகளான தந்தை சமய முத்து மற்றும் அவரது மகன் மணிகண்ட பிரபுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!