பொள்ளாச்சி வழக்கில் புனிதர் வேடம் தரிப்பதா.? இபிஎஸ்ஸை விளாசி தள்ளிய ஆர்.எஸ். பாரதி!!
பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் இன்று பரபரப்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேருக்குப் பொள்ளாச்சி நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சி வழக்கில் அதிமுகவை சாடிய முதல்வர் மு க ஸ்டாலினை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது என்று சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. திமுக உள்ளிட்ட கட்சிகள் மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்திய நிலையிலும் வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சி சிபிஐ விசாரணைக்கு அதிமுக அரசு பரிந்துரைத்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கும் அதிமுக, தன்னை தூயவன் போல காட்ட முயல்கிறது. அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கை போல அண்ணா பல்கலை. வழக்கிலும் போராடுங்கள்... அண்ணாமலை வலியுறுத்தல்!
இதையும் படிங்க: குற்றவாளி கூடாரத்தை கைது செய்தது எனது அரசு... மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!!