×
 
☰

தபால் வாக்கை வாங்கினோமா.? மரகதம் குமரவேலை விளாசிய பரந்தாமன்..!!

மதுராந்தகம் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட பரந்தாமன் மரகதம் குமரவேல் எம் எல் ஏ வை விமர்சித்துள்ளார்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற மரகதம் குமரவேல், தபால் வாக்குகள் தொடர்பாக முக்கியக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அக்டோபர் 6 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் பரந்தாமனை 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து அக்டோபர் 12 அன்று சட்டப்பேரவைத் தலைவர் முன்னிலையில் அவர் எம்.எல்.ஏ.வாக உறுதிமொழி ஏற்றுப் பதவியேற்றார்.பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மரகதம் குமரவேல், இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முழுவதும் எதிர்க்கட்சியினரால் பணம் கொடுத்து வாங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகளில் தமிழக வெற்றிக் கழகம் பின்னடைவைச் சந்தித்தது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்த வாக்குகள் அனைத்தும் பணம் கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் அதை உறுதியாகச் சொல்வதாகவும் தெரிவித்தார்.

திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம், புடவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாரி வழங்கியதாகவும், குறிப்பாக அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளைத் திமுகவினர் பணம் கொடுத்து வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.இடைத்தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகள் தனது மீதும் கட்சி மீதும் பல்வேறு அவதூறுகளைப் பரப்பியதாகவும், ராஜினாமா விவகாரத்தை மட்டுமே திரும்பத் திரும்பக் குறிப்பிட்டுப் பிரசாரம் செய்ததாகவும் மரகதம் குமரவேல் குற்றம் சாட்டினார். அரசின் மீது எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்காமல் தனிப்பட்ட முறையில் தாக்க முயன்றதாகவும், அனைத்தையும் கடந்து மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2027ல் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்... தவெகவுக்கு திமுக எம்.எல்.ஏ சேடப்பட்டி மணிமாறன் எச்சரிக்கை...!

தமிழக வெற்றிக் கழகம் வாக்குக்குப் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றதாகவும் அவர் வலியுறுத்தினார்.இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த திமுக வேட்பாளர் பரந்தாமன், மரகதம் குமரவேல் தபால் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டதாகக் கூறுவதை விமர்சித்தார். எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கியதால் தான் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது என்பதை மறந்து மரகதம் பேசுவதாக அவர் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் இனி பணம் கொடுத்தார்கள், பொருள் கொடுத்தார்கள் என்று பேச எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று பரந்தாமன் கூறினார்.

இதையும் படிங்க: "வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி"..! கனிமொழி MP காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share