“நான் இல்லாமல் கூட்டத்தை நடத்திடுவியா நீ...” - காங்கிரஸ் கனவில் கல்லைப் போட்ட திமுக... பரபரப்பான டெல்லி...!
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா (INDIA) கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 23 கட்சிகள் பங்கேற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் இந்த கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டமாக இது கருதப்படுகிறது. இன்றைய கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்கி வரும் திராவிட முன்னேற்றக் கழகம், இன்றைய கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் இன்று நம்மை கைவிட்டுவிட்டது..!! டெல்லியில் ராகுலுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்..!!
இந்த நிலையில், கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணியை விமர்சிக்கும் வகையில் டெல்லியின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து திமுக, மம்தா பானர்ஜி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்பு தெரிவித்த விமர்சனங்கள் இடம்பெற்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெற உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் வளாகத்திற்கு அருகிலும் இந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள், மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் போது மம்தா பானர்ஜி கூறிய விமர்சனங்கள் உள்ளிட்டவை அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், “இந்த கூட்டணியின் தற்போதைய நிலையை பாருங்கள்” என்ற வகையிலான வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. 20 ஆண்டுகளாக நம்மை சார்ந்து வளர்ந்த காங்கிரஸ் இன்று நம் முதுகில் குத்திவிட்டது என்ற வரிகள் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் காலத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதி விளக்கம் கோரியுள்ளார்.
இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ளன.
இதையும் படிங்க: தவெக + காங்., கூட்டணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் திமுக! பாஜகவுடன் திடீர் நெருக்கம்!!