வெல்லும் தமிழ் பெண்களா? திமுக அரசுக்கு கூச்சமே இல்லையா... அதிமுக விமர்சனம்..!
வெற்று விளம்பரத்தால் மட்டும் பெண்களின் வெற்றி வந்துவிடுமா என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டின் சமூக நலத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல் நிகழும் நிகழ்வாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' விழா, இன்று சென்னையின் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த விழா, தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேற்றத்தின் சாதனைகளை முன்னிலைப்படுத்தி, அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் வெற்றிகளை கொண்டாடும் ஒரு பிரமாண்டமான சிறப்பு நிகழ்ச்சியாக அமையும். இது வெறும் தொடக்க விழா மட்டுமல்ல. பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள உண்மையான மாற்றங்களை, அவர்களின் சொந்த வார்த்தைகளில் உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு தளமாகவும் உருவெடுக்கிறது.
இந்த நிகழ்ச்சியை அதிமுக கடுமையாக விமர்சித்து உள்ளது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்று மேடையில் முழங்க விடியா திமுக அரசுக்கு கூச்சமாக இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும்போது, இந்த விளம்பரக் கொண்டாட்டத்தால் யாருக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வெல்லும் தமிழ் பெண்கள் விழா கோலாகலம்... களைகட்டிய நிகழ்ச்சி...!
வெற்று விளம்பரத்தால் மட்டும் பெண்களின் வெற்றி வந்துவிடுமா என்றும் பெண்கள் பொது இடங்களில் கூட அச்ச உணர்வுடன் பயணிக்கும் நிலை தான் உங்கள் அகராதியில் வெற்றியா எனவும் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. விளம்பர மாடல் விடியா அரசே, வெற்று விளம்பரங்களில் காட்டும் கவனம், சிறிதளவாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இருக்கட்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை... இத செஞ்சே ஆகணும்! திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்...!