கத்தினாலும்., கதறினாலும் கட்டுமரக் கதை எடுபடாது..! திமுகவை கிண்டலடித்த தவெக..!!
திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் தமிழக வெற்றிக்கழகம் விமர்சித்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடந்தகால அனுபவங்களை மையப்படுத்தியதால், தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவின் ஆட்சிக் காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.
அப்போது அவர் அவசரநிலைக் காலத்தில் நடைமுறையில் இருந்த மிசா சட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். திமுகவினர் தங்களது போராட்ட வரலாற்றை மிசா சிறைவாசத்தை வைத்து மார்தட்டிக் கொள்வதாகச் சாடிய அவர், அந்தக் காலகட்டத்தின் பின்னணியை மக்கள் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தை முதல்வர் விஜய் விமர்சித்ததை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக வெற்றி கழகம் விமர்சித்துள்ளது. பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் என்று திமுகவை தமிழக வெற்றி கழகம் விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: VOLTAGE பிரச்சனை... FUSE போன தவெக அரசு... வெளுத்துவிட்ட உதயநிதி..!!
“மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக” இன்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்த தமிழக வெற்றி கழகம், இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது என தெரிவித்துள்ள. கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள் என விமர்சனம் செய்துள்ளது. கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!