×
 

#BREAKING: திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... மநீம சார்பில் யார் போட்டி தெரியுமா?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் வில்சன், சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு ராஜ்ய சபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக என்ன செய்யும்.? 'பொறுமை'யாக பதில் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்.!!

மூன்று வேட்பாளர்கள் திமுகவை சேர்ந்தவர்களாகவும், ஒரு உறுப்பினர் மக்கள் நீதி மய்யம் சேர்ந்தவராகவும் இருப்பார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கறிஞர் வில்சனை தவிர்த்து மற்ற இருவரும் திமுகவின் புதுமுகங்களாகவே உள்ளனர்.

இதையும் படிங்க: திமுகவுக்கு திருமா வைக்கப்போகும் ஆப்பு... 2026 தேர்தலில் விசிகவின் வேற லெவல் டிமாண்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share