×
 

மதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் திட்டம்?! வைகோ முடிவுக்காக காத்திருப்பு! தவெக தாவினால் க்ளோஸ்!?

ம.தி.மு.க., பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவை அறிந்து கொண்டு, அக்கட்சியில் அதிருப்தியில் இருப்போரை, தி.மு.க.,வில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை: ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து, அக்கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தி.மு.க.வில் சேர்க்க தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன.

ம.தி.மு.க. முன்னாள் பொருளாளர் கணேசமூர்த்தியின் மகன் கபிலன், மூத்த நிர்வாகிகளான டி.ஆர். செங்குட்டுவன், கோபால், அழகுசுந்தரம், செவந்தியப்பன், வீரபாண்டியன், ஜெயபிரகாஷ், கழககுமார் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஏற்கெனவே தி.மு.க. தலைமைக்கு கடிதம் அனுப்பியும் உள்ளனர். ஆனால், தி.மு.க. தலைமை இவர்களை ‘காத்திருப்போர் பட்டியலில்’ வைத்துள்ளது.

வரும் ஜூன் 27-ம் தேதி ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா அல்லது விலகுவதா என முக்கிய முடிவு எடுக்கப்படும். அக்கூட்டத்தில் கூட்டணியிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டால், அதிருப்தியாளர்களை வரவேற்கலாம் என தி.மு.க. தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க: நீங்க ஓகே சொல்லுங்க விஜய்!? இப்போவே ராஜினாமா செய்ய சொல்லுறோம்! மதிமுக டீலை மறுக்கும் முதல்வர்?!

இதுகுறித்து ம.தி.மு.க. அதிருப்தியாளர்கள் கூறுகையில், “செங்குட்டுவன் தலைமையில் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளோம். ஜூன் 27 பொதுக்குழு முடிவை அறிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி காத்திருக்கிறோம்” என்றனர்.

இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ம.தி.மு.க. முதன்மை செயலர் துரை வைகோ, “இனி வரும் தேர்தல்களில் பிற கட்சிகளின் சின்னத்தில் நிற்க மாட்டோம்” என தெளிவாக அறிவித்துள்ளார். கடையநல்லூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் ஆகியோர் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். இவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ம.தி.மு.க. தலைமை வலியுறுத்துகிறது. ஆனால், இருவரும் ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் தோல்வியடைந்தால் என்ன செய்வது என அவர்கள் குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ம.தி.மு.க.வில் இருந்து பலர் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. ஜூன் 27-ம் தேதி பொதுக்குழு முடிவு தமிழக அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மதிமுகவை முடித்துக்கட்ட திட்டமிடும் மு.க.ஸ்டாலின்?! கட்சி தாவ தயாராக இருப்பவர்களுக்கு க்ரீன் சிக்னல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share