×
 

சர்க்காரியா கமிஷன்..! விவாதிக்க தெம்பு, திராணி இருக்கா.? முதல்வருக்கு ஆர். எஸ். பாரதி சவால்.!!

சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க முதல்வர் விஜய் தயாரா என்று ஆர் எஸ் பாரதி சவால் விட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் நீண்ட உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி திமுகவின் கடந்தகால ஆட்சியை விமர்சித்தார். 1970களில் திமுக ஆட்சியில் இருந்தபோது வீராணம் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் தயாரிப்பு டெண்டர் விவகாரத்தில் சத்யநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் 2.5 சதவீத கமிஷன் கேட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

டெண்டர் தொகை சுமார் 16 கோடியாக இருந்த நிலையில் அதில் 40 லட்சம் ரூபாய் கமிஷனாக வரும் என்ற கணக்கும், 1970 முதல் 1974 வரை ஏழு தவணைகளாக 29 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், முரசொலி கட்டிடத்திற்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் மேற்கோள் காட்டினார். கருணாநிதி தனது பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியதாக கமிஷன் முடிவு செய்ததாகவும், 2001ஆம் ஆண்டு இதே சட்டப்பேரவையில் ஜெயலலிதா மற்றும் பொன்னையன் ஆகியோர் இதே அறிக்கையைப் பற்றி பேசியிருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டார்.

இது திமுகவின் பொன்விழா சாதனை என்று கிண்டலாகக் கூறிய அவர், தற்போதைய அமலாக்கத்துறை ஆவணங்களையும் இணைத்துப் பேசினார்.இந்தப் பேச்சுக்கு பதிலடியாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து கடுமையாக விமர்சித்தார். “தேடினேன் தேடினேன் ஒன்றுமே கிடைக்கவில்லை, ஆகவே பழைய பஞ்சாங்கத்தைப் பாடுவோம் என எழுதிக் கொடுத்ததைப் போல, இன்றைய முதலமைச்சர் பிறப்பதற்கு முன்பாக கொடுக்கப்பட்ட ஒரு புகாரை எடுத்துக்கொண்டு வந்து இன்று சட்டசபையில் பேசியுள்ளார்” என்று அவர் தொடங்கினார். தற்போதைய தவெக ஆட்சியில் நடந்துள்ள குற்றங்கள், கொலைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியபோதும், அவற்றுக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்ல துணிச்சலோ யோக்கியதையோ இல்லாமல் பழைய சர்க்காரியா கமிஷன் பற்றி மட்டும் பேசியுள்ளதாக பாரதி குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முதல்வர் லண்டன் சென்று திரும்பியதும் காத்திருக்கும் ஷாக்..!!

சர்க்காரியா கமிஷனுக்கு முன்னதாக அளிக்கப்பட்ட புகார்களில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தமானது என்றும், அமைந்தகரையில் உள்ள அருண் ஹோட்டல் அவரது சொத்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக பாரதி நினைவுபடுத்தினார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் அந்த சொத்துக்கள் இப்போது யாருக்குச் சொந்தம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் விடுத்தார். சர்க்காரியா கமிஷன் அவசரகாலத்தில் அமைக்கப்பட்டது என்பதும், அதன் பின்னணி அனைவருக்கும் தெரியும் என்பதும் அரசியல் விவரம் அற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று அவர் கிண்டல் செய்தார்.

 

இதையும் படிங்க: குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share