பெண்ணின போராளி ஸ்டாலின்... உருவக் கேலி விஷயத்தில் Ex. அமைச்சர் சேகர்பாபு கருத்து.!
திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு குறித்து சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் சத்தியபாமாவை உருவக் கேலி செய்ததாகக் கூறப்படும் இந்தப் பேச்சு, அக்டோபர் 2, 2026 அன்று தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு தவெக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பைத் தூண்டியதோடு, முதலமைச்சர் விஜய் உட்பட பல தலைவர்களின் கண்டனங்களையும் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேச்சுக்கு தாராபுரம் தொகுதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் திட்டவட்டமாக கூறினார். தமிழ் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக கண்டிக்கிறேன் என்றும் பெண்கள் அருகில் இருக்கும்போதே அவதூறு பேசுவதில் திமுகவினர் வல்லவர்கள் எனவும் முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார்.
அமைச்சர்களும் பல்வேறு கட்சி தலைவர்களும் ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முழு ஆதரவு கொடுத்துள்ளார். அவரது பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவதூரில் திமுக வல்லவர்கள்..! ஸ்டாலினின் அநாகரிக பேச்சு..! முதல்வர் விஜய் வார்னிங்..!!
எங்கள் தலைவர் பெண்ணினத்தின் பேரொலியாகத் திகழ்பவர் என்று கூறினார். தேர்தல் பரப்புரையில், அந்த வேட்பாளரின் செயலுக்காக பயன்படுத்திய சொல் தானே தவிர, அது அந்த வேட்பாளரைப் பற்றிய தனிப்பட்ட கருத்து அல்ல என்று தெரிவித்துள்ளார். சத்தியபாமா உருவக்கேலி செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: உருவக் கேலி...! பெண்ணை இப்படியா பேசுவது..? ஸ்டாலின் மீது தவெக புகார்..!!