சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்! திமுக மேலிடம் அதிர்ச்சி!
இளைஞர்களை குறிவைத்து நடத்தும் Gen-Z கூட்டம் ஆளில்லாமல் சொதப்பியதால் தி.மு.க. மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க., த.வெ.க.வுக்கு பெரும் ஆதரவு அளித்த Gen-Z இளைஞர்களை கவரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இளம் தலைமுறையினரை இழக்கும் நிலையை சரி செய்ய, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக Gen-Z இளைஞர் சந்திப்பு கூட்டங்களை நடத்த திட்டமிட்டது.
சென்னையில் முதல் கூட்டத்தை நடத்திய தி.மு.க., அடுத்தகட்டமாக கோவை சரவணம்பட்டியில் Gen-Z இளைஞர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இதற்கென இரண்டு பிரத்யேக வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி தீவிர பிரசாரம் செய்யப்பட்டது. கூட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் பதிவு செய்ததாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆனால் உண்மையில் கூட்டத்துக்கு 500 பேருக்கும் குறைவானோரே வந்திருந்தனர். அதிலும் பெரும்பாலானோர் ஏற்கெனவே தி.மு.க. ஐ.டி. விங் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாக இருந்ததால், கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் அப்படி சொல்லல"..! திரித்து வெளியிடுறீங்க... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!!
இந்த தோல்வி சென்னை மேலிடத்துக்கு தெரியவந்ததும், சீனியர் நிர்வாகிகளின் கோபம் கோவை நிர்வாகிகள் மீது திரும்பியுள்ளது. இந்த சூழலை ஈடுகட்டும் வகையில், வரும் 21-ம் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டல Gen-Z இளைஞர் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
எனினும், கட்சியில் நிலவும் முதியோர் ஆதிக்கம்தான் இளைஞர்களை ஈர்க்க முடியாததற்கு முக்கிய காரணம் என தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், “கட்சியில் வெளிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தாமல் எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் இளைஞர்களுக்கு நம்பிக்கை வராது. த.வெ.க.வுக்கு இளைஞர்கள் சென்றதற்கு முக்கிய காரணம் புதிய தலைமையும், புதிய அணுகுமுறையும்தான்” என்றனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க. இளம் தலைமுறையினரை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், Gen-Z கூட்டங்களின் முதல் அனுபவம் கட்சிக்குள் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை ஈர்க்க உண்மையான மாற்றங்கள் தேவை என்பது தி.மு.க.வுக்குள் எழுந்துள்ள முக்கிய குரலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: இனி யாரு கூட்டணியும் வேணாம்! தனித்தே போட்டி! உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்ட திமுக முடிவு?!