×
 
☰

PRISON BREAK- ம் தொடங்கியாச்சு..! ஒன்றுக்கும் உதவாத அரசு.! ஸ்டாலின் விமர்சனம்.!!

கைதிகள் தப்பிய விவகாரம் குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சிறை கைதிகள் தப்பிய சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் நிர்வாகத் திறமையின்மையைச் சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தின் பாதுகாப்பு நிலை குறித்த கவலையை வெளிப்படுத்தினார்.ஸ்டாலின் தனது கருத்தில், புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சி இன்னும் மறைவதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் இத்தனை பேர் தப்பிப்பது 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறை என்று அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்டிருக்கும் 2026 ஆம் ஆண்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தினார்.சிறைக்குள் இருக்கும் கைதிகளே தைரியமாகத் தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைச் செய்து வரும் நிலையில், உள்ளே உள்ளவர்களும் தப்பிச் செல்வது அரசின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்தார்.

ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளைக் கண்காணிப்பதில்லை என்று நினைத்திருந்த நிலையில், சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் நிலைக்கு அரசு சென்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.தமிழக வெற்றிக் கழக அரசை ஒன்றுக்கும் உதவாத அரசாக விமர்சித்த ஸ்டாலின், இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை என்றும், மக்களே தங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது என்றும் குறிப்பிட்டார். சிறைப் பாதுகாப்பு முறையில் ஏற்பட்டுள்ள தோல்வி, மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலையைப் பாதிக்கும் என்ற கவலையை அவர் வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது. Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது என விமர்சித்தார்.

 

இதையும் படிங்க: அன்பில் மகேஷ் கைது பழிவாங்கும் செயல்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share