கதறல் சத்தம் கேட்குதா "UNCLE"… திமுகவுக்கு பதிலடி போஸ்டர்!
வாட் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ... என ஒட்டப்பட்ட திமுக போஸ்டருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்பதாக கூறிய விஜய், பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என கூறினார்.
நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். பாஜகவின் கூட்டணி பொருந்தா கூட்டணியாக இருப்பதால் திமுக எதிர்ப்பதைப் போல் எதிர்த்து ஆதரிப்பதாக தெரிவித்தார்.
ஸ்டாலின் அங்கிள்., வாட் அங்கிள்., இட்ஸ் ராங் அங்கிள் என பேசினார். திமுக…,நீங்கள் நடத்தும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறத., இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா, என்று சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா அனைத்தையும் மூடி மறைத்து விடலாம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். பெண்களின் கதறல் சத்தம் உங்கள் காதில் கேட்கிறதா அங்கிள் என்று கேட்டார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அப்பா என அழைப்பதாக ஸ்டாலின் கூறிக்கொள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனி ஆள் இல்ல கடல் நான்! மதுரை மாநாட்டில் எடுத்த செல்பி வீடியோவை பகிர்ந்த விஜய்..!
முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என விஜய் பேசியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. விஜய்க்கு திமுக உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், விஜயை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மதுரை முழுவதும் விஜயை விமர்சிக்கும் வகையில், WHAT BRO..OVER BRO.. அடக்கி வாசிங்க BRO என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மாவட்ட திமுக இளைஞரணி ஒட்டின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கதறல் சத்தம் கேக்குதா அங்கிள் என்றும் சிங்கத்தின் கர்ஜனை தொடரும்., அது உங்கள் கழக உடன்பிறப்புகளை தூங்க விடாதே என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் பேச்சில் திருப்தி இல்ல... தாடி பாலாஜியின் சர்ச்சை ஸ்டேட்டஸ்!