யாருக்கு பாதிப்பு.? தொழில் வளர்ச்சிக்கு பிரச்சனை... பரந்தூர் விவகாரத்தில் திமுக கொந்தளிப்பு..!!
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்ற அமர்வில் முதல்வர் ஜோசப் விஜய் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். அவை விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமையவிருந்த இரண்டாவது பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகத் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் பெருமளவில் பாதிக்கும் என்றும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதை ஒப்புக்கொண்ட முதல்வர், விவசாய நிலங்கள் குறைவாகப் பாதிக்கப்படும் மாற்று இடங்களைத் தேர்வு செய்வதற்கான தொழில்நுட்ப ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இது தொடர்பாக திமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினர். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்திற்கான தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசிற்கு எந்த விதமான கோரிக்கையும் செல்லவில்லை என்று குறிப்பிட்டார். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக கவனம் இருப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் கூடலூரில் புலிகள் தாக்கியது தொடர்பாக கவனம் ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் கவன ஈர்ப்பு தீர்மானம்..! முடியவே முடியாது.! சபாநாயகரை கண்டித்து திமுக வெளிநடப்பு..!!
ஏற்கனவே 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து விட்டதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார். முதல்வர் 110 விதியின் அறிவித்ததால் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதிக்க மறுத்துவிட்டதாகவும் பரந்தூர் ஏர்போர்ட் மறுக்கப்பட்டால் எத்தகைய பொருளாதார விளைவு ஏற்படும் என விளக்கம் அளிக்க வாய்ப்பு தரவில்லை என்றும் தெரிவித்தார். பல நாட்களாக கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடுக்காது இன்று 11 விதியின் கீழ் அறிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அந்த 3 FILES என்ன.? 1 வாரம் தான் டைம்... முதல்வருக்கு கெடு விதித்த துரைமுருகன்.!!