×
 

முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழு மாநிலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வந்தனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிந்தது.

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வந்தது. பல தொகுதிகளில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பங்கேற்று வந்தனர்.

அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மாலை 6:00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில், ராயப்பேட்டையில் வாக்குப்பதிவு மையத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையிலான மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் ஓட்டு போடாத முக்கிய வேட்பாளர்கள்?! திமுக, தவெக, அதிமுக என அனைத்து கட்சி நிதர்சனம்!

வாக்குப்பதிவு மையத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி ரதி மற்றும் அவரது இரண்டு மகன்களை திமுக வட்ட செயலாளர் மோகன் உள்ளிட்டோர் தாக்கியதாக புகார் எழுந்தது. மோதல் தொடர்பாக மாறி மாறி புகார் அளித்த நிலையில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: உங்களுக்கு எதுக்கு விசிலு..? ஹோம் கார்டை வம்பிழுத்த முன்னாள் எம்எல்ஏ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share