×
 

"அதிகார போதை... அலட்சியமே" திமுக வீழ்ச்சிக்கு காரணம்..! அண்ணாமலை விமர்சனம்.!!

அதிகார போதையில் எதிர்க் கருத்துக்களை அலட்சியப்படுத்தியதே திமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான் என்று we the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது என்றார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான் என்று கூறினார். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல… தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர் என்றும் கூறினார். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: 3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share