×
 

சுப்ரீம் கோர்ட்டிலேயே பல்பு..! உச்சந்தலையில் ஓங்கி கொட்டு..! திமுகவை கலாய்த்த தவெக..!

உச்சநீதிமன்றத்தில் திமுக மனுவை வாபஸ் பெற்ற நிலையில், தவெக விமர்சனம் செய்து உள்ளது.

கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் விஜய், தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பிறகு இந்த மனுவை திமுக வாபஸ் பெற்றது. அப்போது பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் முன்வைத்து இருந்தது. வழக்கு விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றி கழகம் திமுகவை விமர்சனம் செய்துள்ளது. 

ஊழல் செய்யவும் கொள்ளை அடிக்கவும் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்ற தீய நோக்கில் இருப்பதுதான் தீயசக்தி திமுக என்றும் அதனால்தான், ஆட்சி அதிகாரம் பறிபோனதில் இருந்தே தீயசக்தி திமுகவிற்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது. அதன் உச்சபட்சமாக, அறிவாலயத்தில் இருக்கும் மரங்கள்கூட அதிர்ச்சியில் அசைவற்று நிற்கின்றன எனவும் விமர்சனம் செய்து உள்ளது.

மனசாட்சி உள்ள மக்களாட்சியான முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு எப்படியாவது கேடு விளைவிக்க வேண்டும் என்ற கேடுகெட்ட மனநிலையுடன், இதுவரை சேராதவர்களுடன் எல்லாம் சேர்ந்து சதி செய்து வருகின்றனர் என்று தீயசக்தியும் மற்றும் பலரும் ஒரே குரலில் ஒரே வாயில் பேசத் தொடங்கி உள்ளதும் மக்கள் விரும்பும் ஆட்சியைக் கவிழ்க்கும் சதிக்கான அத்தாட்சியே எனவும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

 தமிழ்நாடு முதலமைச்சரின் கரூர் நிகழ்ச்சிக்கும் மக்கள் சந்திப்புக்கும்கூடத் தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு தொடுத்தது. பேச்சுரிமைக்கும் தடை கேட்டுத் தாண்டிக் குதித்தது என்று தெரிவித்துள்ள தமிழக வெற்றிக்கழகம், திமுக தறிகெட்டுத் தாறுமாறாக ஆட்டம் போடுவதை சுப்ரீம் கோர்ட்டும் உணர்ந்துவிட்டது போல. வழக்கு தொடுத்து மனு செய்யும்போது அந்த வழக்கைப் பற்றிய விவரங்களை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள் என்று உச்சந்தலையில் ஓங்கி அடித்து அனுப்பி உள்ளது. அதன் பிறகுதான் புத்தி வந்ததோ. போட்ட மனுவையும் திரும்பப் பெற்றுள்ளது திமுக என்று சாடியுள்ளது. திமுகவின் விதிகளும் சதிகளும் மண்ணோடு மண்ணாக வீழப் போவது உறுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share