×
 

தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

கைது செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காவல்துறையினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தஞ்சாவூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவருடன் அதே காவல் வாகனத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் பயணிக்கின்றனர்.  உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் போலீசார் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது, அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்து தொடர்பாக, தஞ்சாவூர் போலீசார் தற்போது அவரை சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: கைதாகிறாரா உதயநிதி?... நீலாங்கரை வீட்டை சுத்துப்போட்ட போலீஸ் படை... உச்சக்கட்ட பதற்றம்...!

கைது செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காவல்துறையினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், உதயநிதி ஸ்டாலினை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தை திமுக தொண்டர்கள் திடீரென மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

தற்போது, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து முக்கிய சாலையை நோக்கி காவல் வாகனம் சென்றுகொண்டிருக்கிறது. அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல் வாகனத்தைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு வளையம் அமைத்து, பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் வாகனத்தை நெருங்க முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

 உதயநிதி ஸ்டாலினுடன் திமுக வழக்கறிஞர்கள், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அசென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், கைது நடவடிக்கையின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING உதயநிதிக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி... தஞ்சையில் தவெக மகளிர் அணி தரமான சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share