×
 
☰

"மிக்சர் முதல்வர்"..! இரண்டே நாளில் 9 கொலைகள்..! உதயநிதி கண்டனம்..!!

2 நாளில் ஒன்பது கொலைகள் நடந்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான படுகொலை சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருபத்தெட்டு வயதான அஜித் என்ற இளைஞர் தனது தாயுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தாக்குதலுக்கு உள்ளானார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை சரமாரியாக வெட்டி தாக்கினர். இந்த தாக்குதலில் அஜித் உயிரிழந்தார். சம்பவத்தை தடுக்க முயன்ற அவரது தாய் சரசுவும் வெட்டுக் காயங்களுடன் காயமடைந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த படுகொலை கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டியால் நடந்ததாக தெரியவந்துள்ளது. அஜித் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்தியவர்களில் ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரான ராஜேஷ் இன்னும் தப்பியோடிய நிலையில் அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்களை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் நடந்திருப்பதாகவும் என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர் என்றும் கேள்வி எழுப்பினார். திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய உதயநிதி, இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது என்றார்.

இதையும் படிங்க: ஜெம் வீரமணி பிரச்சனை..! திமுக மீது பழி போடுவதா.? CM விஜய், அமைச்சர்களை விசாரிக்க திமுக மனு..!!

குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார் என்றும் இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம், கன்னியாகுமரி, தேனி, கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக முதலமைச்சர் நடத்துகிறார் என்று கேட்டுள்ளார். இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக புதிய வியூகம்! மகளிரணிக்கு கனிமொழி கொடுத்த முக்கிய டாஸ்க்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share