×
 

கார் கொடுத்தால் நிதி நெருக்கடியாம்... அப்போ கார் ரேஸ் மட்டும்..? உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக.!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகம் திமுகவிற்கு பதிலடி கொடுத்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதை திமுக மறுப்பதாக உதயநிதி ஸ்டாலின் என்ற சட்டப்பேரவைகள் அறிவித்தார். நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டி கார் தேவை இல்லை என்ற கூறியுள்ளனர். நிதி நெருக்கடி விவகாரத்தை சுட்டிக்காட்டி இருந்ததால் தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்திருக்கிறது. கார் ரேஸ் திமுக ஆட்சியின் நடத்தப்பட்ட விவகாரத்தை முன்வைத்துள்ளது. 

மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா? என்று தமிழக வெற்றிக் கழகம் கூறியுள்ளது. ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா? என்று கேட்டுள்ளது.

ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவித்தப் பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா? கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே? என கேட்டுள்ளது.

இதையும் படிங்க: சேகர் பாபு VS ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை என்று சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது. கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா என்று கேட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் இதுதான் திமுகவின் இரட்டை வேடம் என்று கூறியுள்ளது. 

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share