சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!
காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேயர் இருக்கை அருகே சென்று கோவை செம்மொழி பூங்கா திட்டத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக நாளிதழில் வந்த செய்தியை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ரகளை - திமுக பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் இரண்டு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்தார் மேயர் ரங்கநாயகி.
கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில், ஆணையாளர் ரவி தேஜா முன்னிலையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கும் முன்பாகவே அரங்கிற்கு வெளியே குடிநீர் பிரச்சினை தொடர்பாக அதிமுகவினரும், சின்னவேடம்பட்டி ஏரி அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் கூட்டம் தொடங்கியவுடன் தங்கள் மண்டலத்தில் நடைபெறும் முகாம்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் எங்களுக்கே தகவல் தெரிவிப்பதில்லை என ஆணையாளரிடம் மண்டல தலைவர் திமுக கவுன்சிலர் மீனா லோகு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். மற்றொருபுறம் அதிமுக கவுன்சிலர்களும் , கம்யூனிஸ்ட் கட்சியினரும் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!
அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேயர் இருக்கை அருகே சென்று கோவை செம்மொழி பூங்கா திட்டத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக நாளிதழில் வந்த செய்தியை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கவுன்சிலரின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பிய திமுக பெண் கவுன்சிலர்கள் மீனா லோகு , மாலதி உள்ளிட்டோர் காங்கிரஸ் கவுன்சிலரை கீழே இறக்கி விட கையைப் பிடித்தும் உடையை பிடித்தும் மூர்க்கமாக இழுத்தனர். அதனால் கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை வெளியேற்றுமாறு மேயர் ரங்கநாயகி அறிவித்தார். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்வதாக அப்போதே ஒலி வாங்கி வாயிலாக மேயர் தெரிவித்தார். காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மகிளா காங்கிரஸ் செயல் தலைவராகவும் உள்ளார். 3 ஆவது முறையாக கவுன்சிலராக உள்ளார்.
இதையும் படிங்க: வேலுமணி, செந்தில்பாலாஜி இல்லாமல் தேர்தல் தயாரிப்பில் கட்சிகள்... கோவையில் மாறும் அரசியல் கணக்கு!