விடிந்ததுமே ஷாக்... திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது...!
தங்க நகைகளை திருடிய வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்து பயணம் செய்தபோது நான்கு சவரன் நகை திருடு போனதாக புகார் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சி அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நெற்குன்றம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்பவர் இந்த ஜூலை 14ஆம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு காஞ்சிபுரத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். வீட்டுக்கு செல்வதற்காக கோயம்பேடு வெங்காயம் வண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு சென்றுள்ளார்
வீட்டிற்குச் சென்றதும், தான் கொண்டு சென்ற டிராவல்ஸ் பேக்கை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த கம்மல் போன்ற நான்கு சவரன் நகைகள் காணாமல் போனதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி அன்று புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மக்களை ஏமாத்தாதீங்க! உடனே அமல்படுத்துங்க... பசுமை தீர்ப்பாய உத்தரவை சுட்டிக்காட்டிய சீமான்
அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் திமுக நதிம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருக்கக்கூடிய பாரதி என்பவரை கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பாரதி மீது வேலூரில் பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள். குறிப்பாக வேலூர் சவுத் பகுதியில் ஒரு வழக்கும், வேலூர் நார்த் பகுதியில் மட்டுமே நான்கு வழக்குகளும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு காவல்கள அவர் மீது வழக்குகள் இருந்தாலும், தற்போது சென்னையில் அவர் திருட்டு வழக்குகளை கைது செய்யப்பட்டு சிறையில் அடிக்கப்பட்டது பெரும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இத்தனை உயிர்கள் போயும் நீட் ஒழியலையே..! அனிதாவின் நினைவு நாளில் சீமான் ஆதங்கம்..!!