×
 

களைகட்டிய ராட்சசபா தேர்தல்... பரிசீலனை பணிகள் மும்முரம்..!! திமுக உறுப்பினர்களின் மனுக்கள் ஏற்பு..!!

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஏற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் வேட்பு மனுக்கள் தாக்க செய்திருந்த திருச்சி சிவா, கான்ஸ்டடைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், l.k. சுதீஷ் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து காலியாகும் ஆறு இடங்களுக்கான போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆளும் திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. தற்போதைய ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று முடிவடைகிறது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு ஆகியோரும், அதிமுகவின் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே. வாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

திமுக சார்பில் நான்கு வேட்பாளர்களும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுகவை பொருத்தவரை இரண்டு சீட்டுகளை தனது கட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கியும், மற்ற இரண்டு இடங்களை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கும் ஒதுக்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: OVER... OVER..! உங்க ஆட்சியின் ஆயுசு ஓவர்தான் ஸ்டாலின் சார்..!! சாடிய அதிமுக..!!

காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஸ்டோபர் திலக் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தனர். இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட நான்கு பேரின் மனுக்களும் ஏற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: வந்தாச்சு ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுக்கள் பரிசீலனை தீவிரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share