×
 

இதுக்கு இல்லையா ஒரு எண்டு... ஒரே நாளில் 17 பேர்... அச்சத்தில் அலறும் விழுப்புரம்...!

ஒரே நாளில் 17 பேரை கடித்துக் குதறிய வெறி நாயால் விழுப்புரத்தில் பதற்றம்.

விழுப்புரத்தில் அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்து வெறி நாய் கடித்ததில் 17 பேர் காயமடைந்து மகாராஜபுரத்திலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

விழுப்புரம் நகர புறபகுதியான லஷ்மி நகர், மகாராஜபுரம், மணி நகர் எம் கே குச்சிப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற நபர்களை அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் ஒன்று 17 பேரை கடித்துள்ளது. வெறி நாய்கடித்ததினால் காயமடைந்தவர்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற்றனர்.

இதில் நான்கு வயதானவர்களை அதிகபடியாக நாய் கடித்ததினால் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் நடந்து சென்றவர்களை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சுற்றி திரியும் வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் நகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடிவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். அதனை தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி கடித்த வெறி நாயினை நகராட்சி நிர்வாகத்தினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: புதுப்பிக்கப்பட்டது சரவண பொய்கை... திருச்செந்தூரில் தெய்வானைக்கு பிரம்மாண்டமான புது வீடு ரெடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share