மாமல்லபுரம் கடற்கரையில் டால்பீன்கள்..! துள்ளி குதிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
மகாபலிபுரம் கடற்கரை அருகே டால்பின்கள் துள்ளி குதித்து வருகின்றன.
மாமல்லபுரம் கடற்கரைக்கு மிக அருகில், டால்பின்கள் சுற்றித் திரிவதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு மிக அருகில் துள்ளி குதித்து செல்வது அனைவரையும் உற்சாகமடைய செய்கிறது. டால்ஃபின்களை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் அமைந்துள்ள குடவரைக் கோயில் மற்றும் கடற்கரை அழகைக் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்வது வழக்கம். தொன்மையான மாமல்லபுரம் கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் எப்போதும் வருகை தருவார்கள்.
இதில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் சூரியக் குளியல் மற்றும் அலை சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் கடல் பகுதியில் டால்பின் மீன்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு மிக அருகில் சுற்றித் திரிந்து வருகின்றன. மேலும், அவ்வப்போது கடலில் இருந்து எகிறி, டைவ் அடித்து மீண்டும் கடலில் குதித்து விளையாடுகின்றன.
இதையும் படிங்க: இன்று முதல் உதகைக்கு செல்ல தடை.. சுற்றுலா பயணிகளுக்கு செம்ம ஷாக்.. வனத்துறை அதிரடி..!
இதனை, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், உள்ளூர் மீனவர்கள் இதுகுறித்துக் கூறும்போது, ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே டால்பின் மீன்களை அதிகளவில் காணமுடியும் என தெரிவிக்கின்றனர். இவை மிகவும் அரிதாக எப்போதாவது, கடற்கரைக்கு அருகில் இதுபோலக் கூட்டமாக சுற்றித் திரியும். டால்பின்களைக் கண்டு ரசிப்பதற்காக, கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருவார்கள் என்று தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!