×
 

என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

என்னை போராளியாக பாருங்கள், தோல்வி என்னை அசைக்காது என  சிவகாசியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுகவினர் யாரும் சஞ்சலப்படத் தேவையில்லை என்றும், தன்னை யாரும் பரிதாபமாகப் பார்க்காமல் ஒரு போராளியாகப் பார்க்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் ஆற்றிய உரை தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இந்தச் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, தேர்தல் தோல்வியைக் கண்டு தொண்டர்கள் தொய்வடையக் கூடாது என்று வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, தேர்தல் தோல்வியைக் கண்டு யாரும் மன வருத்தமோ, சஞ்சலப்படவோ வேண்டாம். நான் பிறப்பால் ஒரு போராளியாக வாழ நினைக்கக்கூடியவன்; இந்தத் தோல்வியெல்லாம் என்னை ஒருபோதும் அசைத்துப் பார்க்க முடியாது. எனக்கு அரசியல் வாழ்விலும், பொது வாழ்விலும் எத்தனையோ சவால்களைச் சந்தித்த அனுபவம் உண்டு என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் எனக் குறிப்பிட்ட அவர், பதவிகளை விட மக்கள் பணியே முக்கியம் என்று பேசினார். "வெற்றி இல்லை என்றால் வாழ முடியாதா? சட்டமன்ற உறுப்பினராக (MLA) இல்லை என்றால் வாழ முடியாதா? பதவிகள் என்பது இன்று வரும், நாளை போகும். ஆனால் மக்களுக்காக உழைக்கும் குணம் என்றும் மாறாது" என்று உணர்ச்சிப் பெருக்குடன் அவர் தெரிவித்தார்.

நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், என்னை யாரும் பரிதாபமாகப் பார்க்காதீர்கள், ஒரு போராளியாகப் பாருங்கள். நாம் தொடர்ந்து மக்களுக்காகக் களத்தில் நின்று போராடுவோம். அதிமுக எப்போதும் மக்கள் சக்தியை நம்பி இருக்கும் இயக்கம்; எனவே, தொண்டர்கள் அனைவரும் முழு வீச்சோடு அடுத்தகட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share