வரதட்சணை கொடுமை! மருமகளின் காதை கடித்து குதறிய மாமியாரின் வெறிச்செயல்
கன்னியாகுமரியில் வரதட்சணை கேட்டு மருமகளின் காதை மாமியார் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வரதட்சணை கொடுமை என்பது இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில், பெண்களுக்கு எதிரான பெரும் சவாலாக இருக்கும் ஒரு சமூகப் பிரச்சினை. இது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடமிருந்து மணமகன் வீட்டினரால் கேட்கப்படும் பணம், நகை அல்லது சொத்தில் மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து நிகழும் உடல், மன ரீதியான வன்கொடுமையையும் உள்ளடக்கியது.
கன்னியாகுமரியில் வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கியதுடன், காதை கடித்து குதறிய மாமியாரின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே வசித்து வருபவர் டெம்போ டிரைவர் பிரின்ஸ். இவரது மனைவி மஞ்சு மருத்துவமனைகள் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், பிரின்சின் தாயார் மஞ்சுவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மது போதையில் வீட்டிற்கு வந்த கணவர் பிரின்ஸிடம் மனைவி மஞ்சு கேள்வி கேட்டு உள்ளார். அப்போது மாமியார் அல்போன்சா தனது மருமகளிடம் தகராறு செய்ததுடன் தலையில் கல்லைக் கொண்டு கடுமையாக தாக்கி, மஞ்சுவின் காதை கடித்து குதறி துண்டாக்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மஞ்சுவை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மஞ்சு அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உ.பி.யில் பயங்கரம்! வரதட்சணை கொடுமை... கொதிக்கும் கத்தியை வைத்து சூடு போட்ட கணவன்..!
நடந்த சம்பவம் தொடர்பாக பேசிய மஞ்சு, அடிக்கடி தனது மாமியார் வரதட்சனை கேட்டு துரத்தி விடுவார் என்றும் தலையில் கல்லை போட்டு காதை கடித்து குதறியதாகவும் தெரிவித்தார். வரதட்சணை கேட்டு மருமகளின் தலையில் கல்லை போட்டதுடன், காதை கடித்து குதறிய மாமியாரின் வெறிச்செயல் கதி கலங்க செய்கிறது.
இதையும் படிங்க: தலைக்கேறிய போதை! மாணவிகளை மடியில் அமர்த்தி HEAD MASTER முத்தம் கொடுத்ததாக பகீர் புகார்!