×
 

இன்னும் 100 சவரன் வாங்கினு வா... வரதட்சணை கொடுமை செய்த கணவனுக்கு லாடம் கட்டிய போலீஸ்

சென்னை அண்ணாநகரில் 100 சவரன் நகை வரதட்சனை கேட்டு கொடுமை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வரதட்சணை கொடுமை என்பது ஒரு ஆழமான சமூகப் பிரச்சினையாக உள்ளது. 1961-ஆம் ஆண்டு வரதட்சணை தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட போதிலும், இந்த பழக்கம் பல பகுதிகளில் இன்னும் நீடிக்கிறது. திருமணத்தின் போது மணமகளின் குடும்பத்திடம் பணம், நகை, அல்லது பிற பொருட்களை கோருவது மற்றும் அதை பூர்த்தி செய்யாதபோது பெண்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துவது வரதட்சணை கொடுமையாக கருதப்படுகிறது.

இதுபோன்ற கொடுமைகளால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் வரதட்சணை தொடர்பான குற்றங்களால் 7,045 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 6,966 பேர் உயிரிழந்துள்ளனர். சமூகத்தில் வரதட்சணை கொடுமை என்பதை ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர். மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஹாரிஸ். இவருக்கும் டிம்பிள் சங்கீதா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. டிம்பிள் சங்கீதாவுக்கு 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறந்த நகைச்சுவை கலைஞர்! ரோபோ சங்கர் உடலுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அஞ்சலி...!

இருப்பினும் மேலும் நூறு சவரன் மற்றும் நிலம் கேட்டு ஹாரிஸ் தனது மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து டிம்பிள் சங்கீதா தனது கணவன் மீது புகார் அளித்ததன் பேரில் மின்வாரிய பொறியாளர் ஹாரீசை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாளை 10 வார்டுகள்.. எங்கெங்க தெரியுமா..?? உங்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share