×
 

இந்த ட்ரெஸ்லாம் போடவே கூடாது..!! கர்நாடக அரசு ஊழியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் கிழிந்த ஜீன்ஸ், ஸ்லீவ் லெஸ் ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (DPAR) சார்பில், அரசு ஊழியர்களின் அலுவலக நடத்தை நெறிமுறைகள் குறித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஊழியர்கள் அணியும் ஆடைகளில் கிழிந்த ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் உடைகள், இறுக்கமான ஆடைகள் போன்றவற்றை அணியக் கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் ஆடை அணிவது அநாகரிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக இளம் ஊழியர்கள், கல்லூரி சூழலுக்கு ஏற்றவாறு உடையணிந்து வருவதாகவும், இது அரசு அலுவலகத்திற்கு பொருந்தாது எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாதவிடாய் விடுப்புக்கு இடைக்கால தடை..?? கொஞ்ச நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..!! கர்நாடக ஐகோர்ட் அதிரடி..!!

"ஆடைகள் மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். அலுவலகத்தில் ஒழுக்கமும், அமைதியும் பேணப்பட வேண்டும்" என சுற்றறிக்கை வலியுறுத்துகிறது. கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சி.எஸ். ஷடக்ஷரி இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். "ஆடைகள் மூலம் மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படக் கூடாது. அரசு அலுவலகம் என்பது தொழில்முறை சூழல், அதற்கேற்றவாறு ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டும்" என அவர் கூறினார்.

இந்த சுற்றறிக்கை அனைத்து துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆடைக்கட்டுப்பாட்டுடன் சேர்த்து, அலுவலக நடத்தைக்கான பிற விதிகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஊழியர்கள் காலை 10:10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும். அலுவலக நேரத்தில் முழு வருகையை உறுதி செய்ய வேண்டும். இயக்கப் பதிவேடு (மூவ்மென்ட் ரெஜிஸ்டர்) மூலம் ஊழியர்களின் வருகை, வெளியேறும் நேரம் பதிவு செய்யப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ காரணங்களுக்காக வெளியே செல்லும்போது மட்டும் அனுமதி பெற வேண்டும்.

மேலும், பணப் பிரகடனப் பதிவேடு (கேஷ் டிக்ளரேஷன் ரெஜிஸ்டர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் தங்களது பாக்கெட் அல்லது பர்ஸில் உள்ள பணத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சில ஊழியர்கள் இது தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என விமர்சித்துள்ளனர். ஆனால், அரசு தரப்பில், இது அலுவலக ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் அலுவலகங்களைப் போல அரசு அலுவலகங்களிலும் உடைக்கட்டுப்பாடு இல்லாத நிலையில், இந்த உத்தரவு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற விதிகள் ஏற்கனவே பீகார், கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் இது அரசு ஊழியர்களின் தொழில்முறைத் தோற்றத்தை உயர்த்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், இந்த சுற்றறிக்கை அரசு அலுவலகங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share