×
 

போதைப்பொருள் வழக்கு: அதிமுக Ex. நிர்வாகியின் அதிர வைக்கும் பின்னணி…

போதை பொருள் சப்ளை செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், அரசு வேலைக்கு வாங்கி தருவதாக 2 கோடி வரை மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவர் யார் யாருக்கு போதைப்பொருட்களை வினியோகம் செய்துள்ளார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இதில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பிரசாத் இடம் போதைப்பொருள் வாங்கியது, அவரிடம் செல்போனில் பேசியது, போதைப்பொருள் வாங்க பணம் அனுப்பியது உள்ளிட்ட விவரங்கள் செல்போன் மூலம் அம்பலமானது.

இதையும் படிங்க: ஶ்ரீகாந்த் கைது.. சீமான் சொன்ன வார்த்தை..! விழிப்பிதுங்கிய முக்கிய தலைகள்..!

மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து எட்டு காலி பாக்கெட்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து இந்த போதைப்பொருள் வழக்கு விசாரணையை போலீசார் மேற்கொண்ட வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தொடர்பான அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். பிரசாத் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பிறரின் செல்போன் அழைப்பு தரவுகள், லொகேஷன்கள் ஆகியவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாகவும், மூன்று ஆண்டுகளாக போதை பொருள் சப்ளை செய்து வந்ததும் போலீசார் அறிக்கையில் தெரிய வந்துள்ளது 

மேலும் பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் வெளிநாடுகளில் உள்ளவர்களின் நிலங்களை போல ஆவணங்கள் மூலம் மிரட்டி அபகரித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த போதைப் பொருள் வழக்கில், மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தலைமுறைவாக உள்ள மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கொக்கைன் வாங்கியதன் பின்னணி..! நடிகர் ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்.. அவிழும் முடிச்சுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share