×
 

#BREAKING அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு?... திடீரென அப்பல்லோ விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

உடல்நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உடல்நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமைச்சர் துரைமுருகன சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் இன்று காலை திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதன் காரணமாகவும், காய்ச்சல் அதிகமாக இருந்ததன் காரணமாகவும் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். இங்கு அவரை பரிசோதித்த அப்போலோ மருத்துனை மருத்துவர்கள் உடனடியாக அங்கு அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர், அதன் அடிப்படையில் அவர் தற்போது அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார். 

தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  நேரடியாக அமைச்சரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.  அதேபோல மருத்துவர்களிடம் துரைமுருகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தஒவ்வொரு மாதமும் அவர் வழக்கமாக பரிசோதனையும் அப்பல்லோ மருத்துவமனையில் தான் செய்து வருகிறார். 

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அலை வீசுகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கணிப்பு..!

அதன் அடிப்படையில் தான் இன்று காலையிலும் அவர் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி சிகிச்சை பெற அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் துரைமுருகனின் உடல் நிலையில் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 

இதையும் படிங்க: தமிழக மாணவர்கள் உங்களுக்குப் பகடை காயா.? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் திருப்பதி நாராயணன்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share