×
 

#BREAKING விடாமல் தொடரும் கனமழை... மேலும் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

தமிழகத்தில் ஏற்கனவே கனமழை காரணமாக 13 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைய இருக்கக்கூடிய நிலையில் வங்கக்கடலில் உருவாகி இருக்கக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவழிந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய சூழலில் 13 மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சில மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிக்கும் செல்லும் வழிகள் மற்றும் கல்வி நிலையங்களை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்பதற்காக அதிகாலையில் முதலே 13 மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். 

செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ஆபத்து...! 7வது முறையாக மேட்டூர் அணையில் ஏற்பட்ட மாற்றம்... 13 மாவட்ட மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை...!

தற்போது கனமழை காரணமாக சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 
 

இதையும் படிங்க: #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share