ஹேப்பி நியூஸ்...!! - மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பிய சென்னை... இனி அந்த பிரச்சனையே கிடையாது...!
சென்னை மெட்ரோ குடிநீர் விநியோகம் நாளொன்றுக்கு 42 மில்லியன் லிட்டர் அளவுக்குக் குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதாவது, தினசரி குடிநீர் விநியோகம் 4.2 கோடி லிட்டர் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய பல நீர்நிலைகளில் தண்ணீர் குறைவாக இருந்ததால், சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் இருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. இதனால், சென்னையில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படாது என்பது அதிகாரிகள் மூலம் நமக்குக் கிடைத்துள்ள முக்கியத் தகவலாக இருக்கிறது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை என்பது, அக்டோபர் 20ஆம் தேதியான நேற்றைய நிலவரமாகும்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் தற்போதைய நிலவரத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த ஆண்டு சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய போரூர் ஏரி, புழல் ஏரி உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள ஆறு முக்கிய ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தது. ஆனால், தற்போது இந்த ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இவங்க படுத்துற பாடு இருக்கே... அடாத மழையிலும் விடாமல் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!
சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய இந்த ஆறு ஏரிகளிலும் ஒட்டுமொத்த நீர் இருப்பு, 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 9,658 மில்லியன் கன அடியாக இருந்தது. ஆனால், தற்போது இந்த ஆறு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 4,979 மில்லியன் கன அடியாக உள்ளது என்று நேற்றைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஆறு ஏரிகளின் நீர் இருப்பு சுமார் 48 சதவீதம் சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 443 மில்லியன் கன அடியாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஏரியிலும் மிகக் குறைவான அளவிலேயே தண்ணீர் இருந்ததால், சென்னையில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயம் நிலவியது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதுடன், இன்றும் கனமழை பெய்து வருவதால் சென்னையில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளதால், அடுத்தடுத்த நாட்களிலும் நீர்நிலைகளில் நீர் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டிலும் பெரிய அளவில் தண்ணீர்ப் பிரச்சினை ஏற்படாது என நம்பப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டதால், சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவும் 179 மில்லியன் லிட்டரிலிருந்து 92 மில்லியன் லிட்டராகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வீராணம் ஏரியின் நீர் இருப்பு சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது.
நீர் இருப்பு சரிந்ததால் குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பெய்து வரும் மழை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் நீர்வரத்து காரணமாக, ஏரிகளின் நீர் இருப்பு உயரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலாக மாறிய புழல் ஏரி... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம்... காலையிலேயே சென்னைக்கு அதிமுக்கிய வார்னிங்...!